AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை பயன்படுத்த தடை? தேமுதிக அதிரடி – பிரேமலதாவின் பதில் என்ன?
ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என தேமுதிக அறிவித்துள்ளது.
நடிகரும், தேமுதிக தலைவரமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உடல்நிலை பாதிப்பால் காலாமனார். இவரது மறைவு தேமுதிக தொண்டர்களை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் அதிர்ச்சி அடையவைத்தது.
திரைப்படத்தில் இனி விஜயகாந்தை பார்க்க முடியாதே என தவித்தனர். இந்தநிலையில் தான் நடிகர் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் விஜயகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக விஜயகாந்தின் குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது.
எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும்.
ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதாக தேமுதிக அறிவித்துள்ளது.
மனைவி கூறியது என்ன?
கேப்டன் விஜயகாந்த் மனைவி பிரேமலதா சமீபத்திய பேட்டி ஒன்றில் இது பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது,
“கோட் படத்தில் கேப்டன் விஜயகாந்தை AI மூலம் கொண்டு வருவதற்கு என்னிடம் அனுமதி வாங்க வெங்கட் பிரபு என்னை பலமுறை சந்தித்தார்.
வருகின்ற தேர்தலுக்குப் பிறகு தளபதி விஜய் கூட கோட் படத்தில் விஜயகாந்தின் AI அனுமதிக்காக என்னை சந்திக்கப் போகிறார்.கேப்டன் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர் சம்மதம் தெரிவித்து இருப்பார்.
எனவே தேர்தலுக்குப் பிறகு சாதகமாகத் நான் முடிவு தெரிவிப்பேன். விஜய் எனக்கு சிறிய வயதில் இருந்து தெரியும். அதைப்போல வெங்கட் பிரபுவையும் தெரியும்.
ஏனென்றால், அவர் இளையராஜாவின் குடும்பம் அவர்களுடைய குடும்பமும் எங்களுடைய குடும்பமும் எப்போதும் ஒற்றுமையாக சிறிய வயதில் இருந்தே நெருங்கி பழகி கொண்டு இருக்கிறாராம்.
எனவே, விஜய் கேட்டும் என்னால் நோ சொல்ல முடியாது அதைப்போல, வெங்கட் பிரபு கேட்டும் என்னால் நோ சொல்ல முடியாது. எனவே, நான் சம்மதம் தான் தெரிவிப்பேன்” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தேமுதிக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளமை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.