பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! சமந்தாவை சிறையில் போடச் சொல்லும் வைத்தியர்
வைரல் காய்ச்சலுக்கு சாதாரண மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு பதில் ஹைட்ரோஜன் பெராக்ஸைடை சுவாசித்தாலே நோய் குணமாகிவிடும் என சமீபத்தில் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மருத்துவ குறிப்புக்கு எதிராக மருத்துவர் Cyriac Abby Philips, aka ‘The Liver Doc’, சமந்தாவை விளாசியுள்ளார்.
நடிகை சமந்தா கொஞ்சம் கூட மருத்துவ அறிவு இல்லாமல் பேசியுள்ளார். அவர், சொல்வது போல ஹைட்ரஜன் பெராக்ஸைடை சுவாசித்தால் உடலுக்குத்தான் தீங்கு விளையும்.
https://x.com/theliverdr/status/1808804909783159003?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1809086284637315473%7Ctwgr%5E490b354f1fd7406779da9cc5f04e3e2c54f9b87f%7Ctwcon%5Es3_&ref_url=https%3A%2F%2Ftamil.filmibeat.com%2Fnews%2Fthe-liver-doc-says-samantha-is-a-serial-offender-in-the-context-of-healthcare-misinformation-136979.html
அதனால், எந்தவொரு நன்மையும் விளையாது. அதனை பயன்படுத்தக் கூடாது என The Asthma and Allergy Foundation of America எச்சரித்துள்ளது என்றும் இதுபோன்ற தவறான சிகிச்சை முறையை பல மில்லியன் ஃபாலோயர்கள் கொண்டுள்ள சமந்தா சொல்லியிருக்கும் நிலையில், அவரை கைது செய்ய வேண்டும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரது கமெண்ட்டை பார்த்து ஷாக்கான சமந்தா, மாற்று சிகிச்சை பற்றியும் தனக்கு இதனை 25 ஆண்டுகள் DRDOவில் பணியாற்றிய மருத்துவர் தான் பரிந்துரை செய்தார் என்றும் சமந்தா கூறியிருந்தார்.
இந்நிலையில், சமந்தாவின் நீண்ட நெடிய விளக்கத்திற்கும் மருத்துவர் சிரியாக் அபி பிலிப்ஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
https://x.com/theliverdr/status/1808837740794106154
சோஷியல் மீடியாவில் இது போல பல பிரபலங்கள் மருத்துவம் பற்றி நன்கு அறிந்தது போல ஏகப்பட்ட ஆரோக்கிய குறிப்புகளை கொடுத்து மக்களை சிக்கலுக்கு ஆளாக்கி வருகின்றனர். நடிகை சமந்தா சொல்வதில் கொஞ்சம் கூட உண்மையில்லை.
அதையெல்லாம் கேட்டு, மக்களே ஏமாறாதீங்க, இதுபோன்ற தவறான கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரபலங்களிடம் இருந்து காப்பாற்றவே சோஷியல் மீடியாவில் சில மணி நேரங்களை என்னை போன்ற மருத்துவர்கள் வீணடிக்க வேண்டியதாக உள்ளது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். நடிகை சமந்தா தனது மருத்துவ குறிப்பு போஸ்ட்டுகளை டெலிட் செய்து விட்டு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை சமந்தாவின் ஐடியாவுக்கு எதிராக விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டா அது ரொம்பவே ஆபத்தான ஒன்று என கமெண்ட் போட்டுள்ளார். நடிகை சமந்தாவுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என்றும் சரியான டாக்டர் குழுவிடம் அறிவுரை கேட்க வேண்டியது அவசியம் என்றும் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.