“விஜய்யுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்” இயக்குனர் ஓபன்

“விஜய்யுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்” இயக்குனர் ஓபன்
  • PublishedJuly 29, 2024

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி போட்டி போட உள்ளது.

இந்த நிலையில், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து இயக்குநரும், நடிகருமான அமீர் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.

“நான் அரசியலுக்கு நிச்சயமாக வருவேன். இன்று இருக்கும் அரசியல் நெருக்கடி காரணமாக அரசியலுக்கு நான் வர வாய்ப்புகள் இருக்கின்றன. எல்லோருமே அரசியலில்தான் இருக்கிறோம். திராவிடம் என்கிற உணர்வு நமது ரத்தத்திலேயே இருக்கிறது. யாரெல்லாம் பாசிசம், ஆரியத்திற்கு எதிராக கொள்கை கொண்டிருக்கிறோமோ அவர்கள் அனைவருமே திராவிட அரசியல் செய்பவர்கள்தான்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாகத்தான் இருக்கிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் என்னை அழைத்தால் அவரது கட்சியில் தாராளமாக இணைவேன். அவருடனும், சீமானுடனும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *