9 வயதில் பல லட்சம் மதிப்புள்ள கார் வாங்கிய குழந்தை நட்சத்திரம்

9 வயதில் பல லட்சம் மதிப்புள்ள கார் வாங்கிய குழந்தை நட்சத்திரம்
  • PublishedJuly 29, 2024

அரண்மனை 4 படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான, தேவ நந்தா தன்னுடைய 9 வயதிலேயே, சுமார் 30 லட்சம் மதிப்பு கொண்ட காரை வாங்கி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு, தோட்டப்பன் என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் தேவ நந்தா. இதைத்தொடர்ந்து, மை சாண்டா, மின்னல் முரளி, ஹெவன், தி டீச்சர், போன்ற பல படங்களில் நடித்தார்.

குறிப்பாக 2022 ஆம் ஆண்டு இவர் உன்னி முகுந்தனுடன் நடித்த ‘மல்லிகாபுரம்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும் தேவ நந்தாவின் நடிப்பும் அதிகம் கவனிக்கப்பட்டது.

தற்போது வருடத்திற்கு ஐந்து படங்களுக்கு மிகாமல் நடித்து வரும் தேவ நந்தா தமிழில் சமீபத்தில் வெளியாகி 100 கோடி வெற்றி கிளப்பில் இணைந்த அரண்மனை 4 படத்தில் நடிகை தமன்னாவின் மகளாக, தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

இதை தொடர்ந்து தெலுங்கில் பாக் என்கிற திரைப்படத்திலும், மலையாளத்தில் கு என்கிற திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார். அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தன்னுடைய 9 வயதிலேயே மிகவும் ஸ்டைலிஷ் ஆன டொயோட்டோ இன்னோவா ஹைகிராஸ் காரை வாங்கி உள்ளார்.

கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த இனோவா ஹைகிராஸ் காரை… இவரின் குடும்பமே காருக்கு மேட்ச் ஆக கருப்பு நிற உடை அணிந்து, ஷோரூமில் இருந்து பெற்றுள்ளனர். இது குறித்த புகைப்படத்தை தேவ நந்தா தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட, பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *