அந்தகன் படத்தில் திடீர் மாற்றம்… பிரஷாந்த் அறிவிப்பு

அந்தகன் படத்தில் திடீர் மாற்றம்… பிரஷாந்த் அறிவிப்பு
  • PublishedJuly 31, 2024

நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அந்தகன். இந்த படம் இவரது 50வது படம். இந்த படத்தினை பிரசாந்த்தின் அப்பாவும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கியுள்ளார்.

படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மாற்றுத் தேதியில் படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக பிரசாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேலைகளும் மிகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது.

அதாவது, ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 9ஆம் தேதியே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. இதனை படத்தின் நடிகர் பிரசாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *