நடிப்பு அசுரனின் 2ஆவது சிங்கிள்… ஆடியோ லான்ச் திகதியும் அறிவிப்பு

நடிப்பு அசுரனின் 2ஆவது சிங்கிள்… ஆடியோ லான்ச் திகதியும் அறிவிப்பு
  • PublishedAugust 1, 2024

இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஸ்டுடியோஸும், தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து, மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள திரைப்படம், ‘தங்கலான்’.

இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு புதுமையான கதைக்களத்தில் இயக்கி உள்ளார்.

பழங்குடி மக்கள், ஆங்கிலேயர்களால் எப்படி தங்கம் எடுக்கும் பணிக்கு அடிமை படுத்தப்பட்டனர் என்பதே இப்படத்தின் மைய கதை என்பது இப்படத்தின் ட்ரைலர் மூலம் தெரிய வந்தது.

‘தங்கலான்’ படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக, நடிகை பார்வதி திருவோத்து நடித்துள்ளார். மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், அன்புதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளளார்.

இந்த படத்தின், இரண்டாவது சிங்கிள் குறித்த தகவலை தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி நாளை, இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என்றும்… ‘தங்கலான்’ பட ஆடியோ லான்ச் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எங்கு, எப்போது என்கிற எந்த விவரத்தையும் படக்குழு அறிவிக்கவில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் முழு விவரம் வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *