32 ஆண்டுகள் தீரா சாதனைகளும்… ஆரா ரணங்களும்… ‘விடாமுயற்சி’ புதிய போஸ்டர்

32 ஆண்டுகள் தீரா சாதனைகளும்… ஆரா ரணங்களும்… ‘விடாமுயற்சி’ புதிய போஸ்டர்
  • PublishedAugust 3, 2024

தல அஜித் தன்னுடைய 21 வயதில், அமராவதி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே, என அடுத்தடுத்து சில படங்களில் நடித்த போதிலும், இந்த படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால், தன்னால் தயாரிப்பாளர்கள் யாரும் நஷ்டம் அடையக் கூடாது என்று எண்ணி திரையுலகை விட்டே விலக முடிவு செய்தார்.

அந்த சமயத்தில் தான் இயக்குனர் வசந்த், ‘ஆசை’ படத்திற்காக அஜித்தை அணுக, இவருக்கு கதை மிகவும் பிடித்திருந்ததால் இப்படத்தி நடிக்க கமிட் ஆனார்.

ஆனால் இந்த படமும் தோல்வி அடைந்தால், கண்டிப்பாக சினிமாவை விட்டு விலகி வேண்டும் என்பதும் மிகவும் தெளிவாக இருந்தார் அஜித்.

ஆனால் ‘ஆசை’ திரைப்படம், அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. கதை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கிய அஜித், காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வாலி, அமர்க்களம், தீனா, சிட்டிசன், பில்லா, என நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் வெற்றி கண்டதோடு… அஜித்தை வசூல் மன்னனாகவும் மாற்றியது.

ஒருகட்டத்தில் அஜித் தனக்கான ரசிகர்கள் மன்றத்தை கலைத்த போதிலும் கூட, இவருக்கு உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சினிமா மட்டும் இன்றி, கார் ரேசிங், பைக் ரேஸ், போட்டோகிராபி, சமையல், துப்பாக்கி சுடுதல், ஆரோ மாடலிங் என தன்னுடைய திறமையை பல்வேறு விதத்தில் வெளிக்காட்டி வரும் அஜித், தொடர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. கடந்த கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு, முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே படமாக்கப்பட்டு வந்ததால், பல்வேறு சவால்களையும், சங்கடங்களையும் கடந்து உருவாகியுள்ளது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள பட குழுவினர், அவ்வபோது ‘விடாமுயற்சி’ குறித்த அப்டேட்டை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் அஜித், சினிமாவில் அறிமுகமாகி 32 வருடங்கள் ஆவதை சிறப்பிக்கும் விதமாக “32 ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆரா ரணங்களும்… யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி. என்கிற வசனத்தோடு அடங்கிய புதிய போஸ்டரை லைக்கா நிறுவனம் வெளியிட்டு அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

அஜித் ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வரும் ‘குட் பேட் அக்லீ’ தஜிரைப்படத்திலும் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் பொங்கலை குறிவைத்து தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *