பவர் ஸ்டாருடன் திருமணம்? ஹனிமூனுக்கு நாள் குறிச்சிடலாமா? அதிர்ச்சி கிளப்பிய வனிதா

பவர் ஸ்டாருடன் திருமணம்? ஹனிமூனுக்கு நாள் குறிச்சிடலாமா? அதிர்ச்சி கிளப்பிய வனிதா
  • PublishedAugust 5, 2024

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத வாரிசு நடிகைதான் வனிதா. இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார்.

அவரது மகள் ஜோவிகா பிக்பாஸ் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். வனிதாவுக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் நடந்து முடிந்தது.

இந்தச் சூழலில் சினிமா மேடையில் வனிதா பேசியிருக்கும் விஷயம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு வனிதா மாலை போடுவது போல் ஒரு போஸ்டர் வெளியானது. அதனைப் பார்த்த ஒருதரப்பினர் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள் என்று கிளப்பிவிட்டார்கள்.

ஆனால் அது அவர்கள் இருவரும் இணைந்து நடித்த பிக்கப் படத்தின் போஸ்டர் என்பது பின்னர் உறுதியானது. இந்நிலையில் வனிதா இப்போது வைஜெய்ந்தி ஐபிஎஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

அந்தப் படத்தின் விழா சென்னையில் நடந்தது. இதில் பவர் ஸ்டாரும் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய பவர் ஸ்டார் எனது தோழி வனிதாவை நீண்ட காலத்துக்கு பிறகு சந்திக்கிறேன் என்று கூறினார். உடனே பேச்சை இடைமறித்த வனிதா, ‘தோழியா?.. நமக்கு திருமணமே செய்து வைத்துவிட்டார்கள். நான் வெளியூருக்கு போகையில் நீங்கள் பவர் ஸ்டார் பவன் கல்யாணை திருமணம் செய்துகொண்டீர்களா என்று கேட்கிறார்கள்.

இல்லை இல்லை நான் பவர் ஸ்டார் சீனிவாசனைத்தான் திருமணம் செய்திருக்கிறேன் என்று சொல்வேன். உங்களை திருமணம் செய்து ஒன்னும் நடக்கவில்லை’ என்று கலாய்த்தார்.

அதற்கு உடனே பவர் ஸ்டாரோ, ’என்ன செய்வது. நீங்கள் தாய்லாந்து போய்டுறீங்க. நானும் இங்கு இருப்பதில்லை. ஒருநாள் ஹனிமூனுக்கு நாள் குறித்துவிடலாம்’ என்றார். இருவரது இந்த கலகலப்பான உரையாடல் ட்ரெண்டாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *