மூக்குத்தி அம்மன் – 2 படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா? அப்போ ஆர்ஜே பாலாஜி?
ஆர்ஜே பாலாஜி இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார்.
மூக்குத்தி அம்மன் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் வசூலும் குவிந்த நிலையில் அடுத்ததாக மாசாணி அம்மன் என்ற படத்தை ஆர்ஜே பாலாஜி திரிஷா லீட் கேரக்டரில் நடிக்க இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படமும் உருவாக உள்ளதாகவும் வேல்ஸ் நிறுவனம் அதை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் குறித்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை பிரபல இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளருமான சுந்தர் சி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரண்மனை 4 படத்தை கொடுத்திருந்தார் சுந்தர் சி. அவரது நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியிருந்த இந்தப் படம் 100 கோடி கிளப்பில் இணைந்திருந்தது.
இந்த படத்திலும் கிளைமாக்சில் சாமி சென்டிமென்ட்டை மையமாக வைத்து பல காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தன. அதேபோல கிளைமாக்சிலும் கோயில் திருவிழாவில் குஷ்பூ மற்றும் சிம்ரன் இணைந்து மாஸான நடனத்தையும் கொடுத்திருந்தனர். தீமைக்கு எதிராக அம்மன் களத்தில் இறங்குவதாக இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காணப்பட்டது.
இந்நிலையில் அடுத்ததாக மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.