“தங்கலான்” முதல்நாள் செய்துள்ள வசூல் விபரம் வெளியானது

“தங்கலான்” முதல்நாள் செய்துள்ள வசூல் விபரம் வெளியானது
  • PublishedAugust 16, 2024

பா. ரஞ்சித் இயக்கத்தில் முதல் முறையாக சீயான் விக்ரம் நடித்து உருவான தங்கலான் படம் நேற்று உலகளவில் திரையரங்கில் வெளிவந்தது. இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க, முன்னணி இசையமைப்பாளர். ஜி. வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இப்படத்தின் மீது இருந்தாலும், விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி என அனைவருடைய நடிப்பும் மிரட்டலாக இருந்தது. அதே போல் ஜி. வி. பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு மாபெரும் பலமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இது சிறந்த ஓப்பனிங் என கூறப்படுகிறது. வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எந்த அளவிற்கு உச்சத்தை தொடும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *