நாக சைத்தன்யா இல்லாமல் இரவு விருந்துக்கு சென்ற சோபிதா… வைரலாகும் வீடியோ
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021-ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின.
இருவரும் தங்களின் காதலை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அடுத்தாண்டு திருமணம் செய்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் சோபிதா தற்போது இரவு விரந்து ஒன்றில் கலந்துகொள்வதற்காக வெளியில் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நிச்சயம் முடிந்த பின்பும், இப்படி இரவில் பார்ட்டிகளுக்கு செல்வதும், அதும் நாகதைன்யா இல்லாமல் செல்வதும் பலரது கண்களுக்கும் பல சிந்தனைகளை எழுப்புகின்றது.