ரஜினியின் வேட்டையன் பட பாடல் லீக்கானதால் அதிர்ச்சி

ரஜினியின் வேட்டையன் பட பாடல் லீக்கானதால் அதிர்ச்சி
  • PublishedAugust 20, 2024

நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாக உள்ள படம் வேட்டையன்.

முன்னதாக ஜெய் பீம் என்ற மிகச் சிறப்பான படத்தை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ள டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படம் உருவாகியுள்ளது.

போலி என்கவுண்டருக்கு எதிரான படமாக வேட்டையன் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து படத்தின் ப்ரோமோஷன்களையும் மேற்கொள்ள லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் விரைவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீசாக உள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் வேட்டையின் படத்தின் மனசிலாயோ பாடலின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் லீக்காகியுள்ளன.

இந்த காட்சிகளில் ரஜினி மாஸாக நடனமாடியுள்ள நிலையில் அவருடன் இணைந்து அனிருத்தும் நடனமாடி உள்ளதை பார்க்க முடிகிறது. மிகவும் பிரம்மாண்டமாக இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளதை இந்த காட்சிகள் மூலம் அறிய முடிகிறது.

படக்குழுவனிர் வெளியிடும் முன்னதாக இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ரஜினியின் படங்களில் எப்போதுமே பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் மிகப்பெரிய அளவில் கவனம் கொடுக்கப்படும். அந்த வகையில் வேட்டையன் படத்தின் பாடல்களும் பிஜிஎம்மும் ரசிகர்களை சிறப்பாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *