சென்னையில் தக் லைஃப் சூட்டிங்.. மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு

சென்னையில் தக் லைஃப் சூட்டிங்.. மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு
  • PublishedAugust 21, 2024

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப். இந்தப் படத்தினை இயக்குநர் மணிரத்னம் இயக்கி வருகின்றார். இந்தப் படத்தில் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

மேலும் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கின்றார். தக் லைஃப் படத்தி படப்பிடிப்பு சென்னை தி. நகரில் நடைபெற்றுள்ளது. அது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை, ராஜஸ்தான், டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. 60 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழு தரப்பில் கூறப்படுகின்றது.

அதேநேரத்தில் படப்பிடிப்பு முடிய முடியவே படத்தின் டப்பிங் பணிகளும் நடந்து முடிந்துள்ளது. குறிப்பாக கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா ஆகியோர் தங்களது டப்பிங்கை முடித்துவிட்டனர் எனவும் கூறப்படுகின்றது. அடுத்தகட்டம் அயர்லாந்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் படத்தின் படப்பிப்பு சென்னையின் மிகவும் முக்கியமான பகுதியான மற்றும் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமான தி. நகர் எனப்படும் தியாகராய நகரில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இந்தப் படப்பிடிப்பில் சிம்பு தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் சிம்பு வந்ததை அங்கிருந்த பலர் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

https://x.com/itzSekar/status/1825910514708283761?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1825910514708283761%7Ctwgr%5E1d08b3f827eff95703789271b1e44b9308ecd034%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.filmibeat.com%2Fnews%2Fkamal-haasanthug-life-movie-shooting-video-goes-trending-simbu-at-shooting-spot-watch-140083.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *