விஜயகாந்த்தின் மூத்த மகனுக்கு திருமணம்? எப்போது தெரியுமா?
விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இந்தச் சூழலில் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
விஜயகாந்த் இந்தப் பெயரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. சினிமாவில் நுழைந்து தனக்கான தனித்த உடல் மொழி, ஸ்டைல், வசன உச்சரிப்பு, நடிப்பு என அனைத்திலும் முத்திரை பதித்தவர்.
ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் பீக்கில் இருந்தபோது சினிமாவுக்குள் நுழைந்து தனக்கென தனி ரசிகர் படை சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியவர் விஜயகாந்த்.
சினிமாவில் கலக்கிவந்த விஜயகாந்த் அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவருக்கு சில துரோகங்கள் நிகழ்த்தப்பட்டன. அது விஜயகாந்த்துக்கு ரொம்பவே மன உளைச்சலை கொடுத்தது. இதனையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி முழு ஓய்வு பெற்றார். பிறகு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த வருடம் உயிரிழந்தார்.
இதற்கிடையே விஜயகாந்த்தின் மகன்களில் ஒருவரான விஜய பிரபாகரனுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணம் நடக்கவில்லை. விஜயகாந்த்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமானதால்தான் அவரது திருமணம் நடக்கவில்லை என்று கூறப்பட்டது.
இந்தச் சூழலில் விஜய பிரபாகரன் திருமணம் எப்போது நடக்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் முடிந்த பிறகு பிரபாகரனின் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.