உலக அழகியை உருவாக்கி உலகளவில் பிரபல்யமடைந்த இலங்கை இளைஞன்

உலக அழகியை உருவாக்கி உலகளவில் பிரபல்யமடைந்த இலங்கை இளைஞன்
  • PublishedSeptember 19, 2024

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உண்டு. அதை கண்டுபிடிப்பது என்பதும் ஒரு திறமை தான்.

அந்த வகையில் இலங்கை – பதுளையைச் சேர்ந்த நிகேஷன் சிவந்தரம் (Nigeshan Sivasundharam (Nigydolls)) என்ற இளைஞன் தனக்குள்ள திறமையை சிறப்பாக பயன்படுத்தி உலகளவில் பிரபலயமடைந்துள்ளார்.

இவர் பொம்மைகள் செய்வதில் மிகவும் கைதேர்ந்தவர். குறிப்பாக சினிமா நட்சத்திரங்களை பொம்மைகளாக வடிவமைத்து பிரபல்யமடைந்துள்ளார்.

தமிழ் சினிமா, ஹிந்தி சினிமா, தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் மிகவும் பிரபல்யமானவர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் அணிந்திருந்த ஆடை அணிகளன்கள் உட்பட அனைத்தையும் அழகாக செய்து அசத்தியுள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் செய்த ஐஷ்வர்யா ராயின் பொம்மை தான் வைரலாகி வருகின்றது.

உலக பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் ஐஷ்வர்யாராய் அணிந்திருந்த உடை, நகைகள், மேக்கப் என அனைத்தையும் அழகாக பொம்மை வடிவில் செய்து அசத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *