“கங்குவா” ரிலீஸூக்கு புதிய திகதி அறிவிக்கப்பட்டது

“கங்குவா” ரிலீஸூக்கு புதிய திகதி அறிவிக்கப்பட்டது
  • PublishedSeptember 19, 2024

நடிகர் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நாயகனாக நுழைந்து சூர்யா இப்போது தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி பயணித்து வருகிறார்.

இந்த நிலையில், சூர்யாவின் நடிப்பில் முதன்முறையாக மிக பிரம்மாண்டமாக உருவாகும் படம் தான் கங்குவா.

நடிகர் சூர்யாவே மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் படமாக அமைந்துள்ளது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் கங்குவா.

ரூ. 300 முதல் ரூ. 350 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இந்த படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில், அன்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியிருக்கும் வேட்டையன் படம் ரிலீசாகின்றது.

இதனால் கங்குவா பட ரிலீஸை தயாரிப்பு குழு தள்ளிவைக்க முடிவு செய்ததாக கூறப்பட்டது.

தற்போது இந்த படம் வரும் நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *