கௌதமிக்காக கமல் உருகி உருகி எழுதிய பாடல் எது தெரியுமா?

கௌதமிக்காக கமல் உருகி உருகி எழுதிய பாடல்  எது தெரியுமா?
  • PublishedSeptember 22, 2024

உலக நாயகன் கமலஹாசன், நடிகை கௌதமியுடன் 10 வருடங்களுக்கு மேல் லிவிங் டுகெதர் ரிலேஷன் ஷிப்பில் வாழ்ந்த நிலையில், கௌதமிக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக இவர் எழுதி, பாடிய ஹிட் பாடல் குறித்து உங்களுக்கு தெரியுமா?

நடிகர் கமல்ஹாசனை பொறுத்தவரை… அவர் எந்த அளவுக்கு மிகவும் பிரபலமானவரோ, அதே அளவுக்கு அவருடைய வாழ்க்கையில் சர்ச்சைகளும் நிறைந்துள்ளன.

இளம் நடிகராக இருக்கும் போதே பிரபல நடிகை ஸ்ரீவித்யாவை காதலித்து வந்த கமலஹாசன், பின்னர் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஸ்ரீவித்யாவை விட்டு விலகிய நிலையில், பிரபல பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை 1978 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கமலஹாசன் – வாணி கணபதி இருவரும் 1988-ஆம் ஆண்டு, சரியாக பத்து வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

வாணி கணபதி கமல்ஹாசனை விட்டு பிரிய முக்கிய காரணம், நடிகை சரிகா உடன் கமல் வைத்திருந்த தொடர்பு தான். வாணியை விவாகரத்து செய்து பிரிந்த அதே ஆண்டு நடிகை சரிகாவை கமலஹாசன் கரம் பிடித்தார்.

கமலஹாசன் இரண்டாவது திருமணம் நடைபெறும் போது, சரிகா நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தார். சரிகா – கமல்ஹாசனுக்கு ஸ்ருதி, அக்ஷரா ஆகியோர் பிறந்த பின்னர், இரண்டாவது மனையிடம் இருந்து 2004 ஆம் கமல் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

பின்னர் கமல்ஹாசனுடன் ‘தேவர்மகன்’ படத்தில் நடித்த போதே காதல் சர்ச்சையில் சிக்கிய நடிகை கௌதமி, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது அவருக்கு உறுதுணையாக இருந்த கமலஹாசன், 2005 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கௌதமியுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்தார்.

இதைத்தொடர்ந்து நடிகை கௌதமி தன்னுடைய மகளின் எதிர்காலம் கருதி கமல்ஹாசனிடம் இருந்து பிரிவதாக அறிக்கை வெளியிட்டு அறிவித்தார். தற்போது கமல்ஹாசன் மற்றும் கௌதமி இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும், இவர்கள் பற்றிய தகவல் ஏதேனும் வெளியானால் அந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்படுகிது.

அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன், நடிகை கௌதமி கேன்சர் சிகிச்சையில் இருக்கும்போது.. அவருக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாகவும், தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இவர் இயக்கி – தயாரித்து நடித்த ‘விருமாண்டி’ படத்தில், இடம்பெற்ற பாடல் ஒன்றை எழுதி இருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா. ‘உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல’ என்கிற பாடலை தான் கௌதமிக்காக கமலஹாசன் எழுதினாராம்.

மேலும் இந்த பாடலை, எந்த உணர்வில் எழுதினாரோ… அதே உணர்வோடு பாடகி… ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடியிருந்தார். இந்த பாடல் தற்போது வரை ரசிகர்கள் அதிகம் கேட்கும், ரொமான்டிக் மெலடி பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

அதேபோல் இந்த பாடலில் சாட்சி சொல்ல ‘சந்திரன் வருவான் டி’ என்கிற வரி… தன்னுடைய அண்ணன் சந்திரஹாசனை மனதில் வைத்து எழுதப்பட்டது என்பதை கமல் தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறி இருப்பார். இந்த படம் 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம் ஆகும். கமல்ஹாசன், கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில், அபிராமி ஹீரோயினாக நடித்திருந்தார். பசுபதி, நெப்போலியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 40 கோடி வரை வசூலை வாரி குவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *