மெய் மறக்க வைத்ததா “மெய்யழகன்”…

மெய் மறக்க வைத்ததா “மெய்யழகன்”…
  • PublishedSeptember 27, 2024

நடிகர் கார்த்தி கடைசியாக நடித்த ‘ஜப்பான்’ திரைப்படம், மோசமான விமர்சனங்களை பெற்று படு தோல்வியை சந்தித்த நிலையில், (செப்டமபர் 27) அதாவது இன்று, கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ‘மெய்யழகன்’.

இந்த படத்தை, ’96’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ளார்.

அரவிந்த்சாமி, ஸ்ரீ வித்யா, ராஜ்கிரண், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள இந்த படத்தை, சூர்யா – ஜோதிகா 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

மாமன் – மச்சான் இடையே இருக்கும் குறும்புத்தனம், பாசம், நட்பு, சண்டை, போன்ற விஷயங்களை மிகவும் அழகாக இந்த படத்தில் படமாக்கியுள்ளார் பிரேம்குமார்.

பிரபல நடிகரும் திரைப்பட விமர்சகர்மான கயல் தேவராஜ், ‘மெய்யழகன்’ படத்திற்கு 4/5 ஸ்டார்கள் கொடுத்துள்ளார். மேலும் குடும்ப உறவுகளைப் பற்றிய உன்னதமான விஷயங்களை மிகவும் உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கும் அக்மார்க் பொழுது போக்கு திரைப்படம் இது என கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *