‘கண்ணப்பா’ படத்தின் புதிய போஸ்டர் – பார்த்தாலே சும்மா நடுங்குதுல…

‘கண்ணப்பா’ படத்தின் புதிய போஸ்டர் – பார்த்தாலே சும்மா நடுங்குதுல…
  • PublishedSeptember 28, 2024

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள திரைப்படம் ‘கண்ணப்பா’. இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கும் நிலையில் இப்படத்தில் சூனியக்காரியாக நடிக்கும் ஐஸ்வர்யாவின் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவன்தொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் இந்த கண்ணப்பநாயனார். சிவபெருமானின் மீது அசைக்க முடியாத பக்தி கொண்ட கண்ணப்பாவின் கதை சொல்லும் படம் தான் இப்படம்.

முற்பிறவியில் கண்ணப்பநாயனார் அர்ஜுனனாக இருந்தார். அர்ஜுனன் மிகப்பெரிய சிவபக்தனாக இருந்தார். அவர் மகாபாரதபோரில் தன்னுடைய மகனான அபிமன்யூவை கொன்றவர்களை கொல்ல, உணவும் உண்ணாமல், சிவபூஜையும் செய்யாமல் சிவபெருமானிடம் வரம் கேட்பதற்காக கைலாசம் சென்றார்.

அங்கு சிவனைப் பார்த்து மெய்மறந்த அர்ஜூனன்,மகனை கொன்றவர்களை கொன்றவர்களை கொல்லவேண்டும் என்ற வரத்தை மறந்து, அய்யனே உன்னை என்றுமே மறவாத வரத்தை தரவேண்டும் என்று கேட்டார். அர்ஜூனன் கேட்ட வரத்தை அடுத்த பிறவில் உனக்கு கிடைக்கும் என்று சிவபெருமான் வரம் கொடுத்தார்.

அந்த வரத்தின் பலனாக, கண்ணபிரான் தீவிர சிவ பக்தராக இருந்தார். இப்படி வரலாற்று சிறப்பு மிக்க இத்திரைப்படம் தான் கண்ணப்பா.

இப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில், விஷ்ணு மஞ்சு, அக்‌ஷய் குமார், மோகன் பாபு, மோகன்லால், பிரம்மானந்தம், பிரபாஸ், ஐஸ்வர்யா என பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ‘கண்ணப்பா’ திரைப்படத்தின்புது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், நடிகை ஐஸ்வர்யா சூனியக்காரியாக நடித்துள்ளார். தற்போது வெளியாகி உள்ள இந்த போஸ்டர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *