தளபதி 69 – இல் இணைந்த அனிமல் வில்லன்… விஜய்யின் திட்டம் தான் என்ன?

தளபதி 69 – இல் இணைந்த அனிமல் வில்லன்… விஜய்யின் திட்டம் தான் என்ன?
  • PublishedOctober 1, 2024

கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தளபதி 69 படம் உருவாக உள்ள நிலையில், அந்த படத்தில் நடிக்கப் போகும் நடிகர்களின் அறிவிப்பை இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு அறிவிக்கப் போவதாக இயக்குனர் அறிவித்திருந்தார்.

இதில், ஏற்கனவே கசிந்தது போல முதல் ஆளாக பாலிவுட் நடிகர் பாபி தியோலின் பெயர் கசிந்துள்ளது.

அனிமல் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா வில்லனாகவே மாறிவரும் பாபி தியோல் கங்குவா படத்தைத் தொடர்ந்து தளபதி 69 படத்திலும் வில்லனாக தமிழ் சினிமா ரசிகர்களை மிரட்ட காத்திருக்கிறார்.

இந்தியில் எப்படியாவது தனது மார்க்கெட்டை நிலை நாட்டி விட வேண்டும் என லியோ படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் இந்தி பட வில்லனை விஜய் புக் செய்திருப்பதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

அனிமல் படத்தில் மிரட்டிய பாபி தியோல் வரும் நவம்பர் 14ம் தேதி கங்குவா படத்தில் அதிரன் எனும் கதாபாத்திரத்தில் கோலிவுட் ரசிகர்களை அல்லு கலங்க வைக்க உள்ள நிலையில், அடுத்து விஜய் படத்திலும் அவர் தான் மெயின் வில்லனே.

பாபி தியோலை அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்திற்கு புக் செய்துள்ள நிலையில், ஹீரோயினும் சூர்யா 44 படத்தின் ஹீரோயின் தான் என்கிற தகவல்களும் அடிபட்டு வருகின்றன.

விஜய்யின் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஹலமதி ஹபிபோ ஆட்டம் போட்ட பூஜா ஹெக்டேவுக்கு பீஸ்ட் படத்தில் பெரிதாக வெற்றிக் கிட்டாத நிலையில், தற்போது சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். சமந்தா, மஞ்சு வாரியர் எல்லாம் இல்லை என்றும் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜு உள்ளிட்ட 2 ஹீரோயின்கள் தான் தளபதி 69ல் நடிக்கப் போவதாகவும் அக்டோபர் 5ம் தேதி படபூஜை போடப்பட்டு ஷூட்டிங்கே தொடங்கி விடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *