தளபதி 69 கதாநாயகியை அறிவித்த படக்குழு.. மறுபடியும் இவங்களா?

தளபதி 69 கதாநாயகியை அறிவித்த படக்குழு.. மறுபடியும் இவங்களா?
  • PublishedOctober 2, 2024

நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை தெரிவித்தபோது தமிழ் சினிமாவில் இருந்து முழுவதுமாக ஒதுங்கப்போவதாக அறிவித்தார்.

இதனால் இவரது 69வது படம் இவரது கடைசிப் படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தினை ஹெச். வினோத் இயக்கவுள்ளார் என்ற தகவல் முன்னரே அறிவித்தது.

மேலும் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதும், இந்தக் கதை ஹெச். வினோத், நடிகர் கமல்ஹாசனுக்குச் சொன்ன கதை எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்றில் இருந்து அதாவது, அக்டோபர் முதல் தேதியில் இருந்து, படத்தில் யாரெல்லாம் விஜய் உடன் நடிக்கின்றார்கள் என்ற, அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்தனர்.

அந்த வகையில் படத்தில், பேபி டயால் நடிப்பதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இன்று படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார் என்ற தகவலை படக்குழு தெரிவித்துள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. மேலும் இவர் ஏற்கனவே விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *