ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து மருத்துவர்கள் வெளியிட்ட அப்டேட்
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்தின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 30ம் தேதி அவர் சென்னையின் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நலம் தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் டிஸ்சார்ஜ் குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகி உள்ளது.
அவர், நாளைய தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் உடல்நிலை சீராகி அவர் நாளைய தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே அவர் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அவருக்கு பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், அந்த படத்தில் தொடர்ந்து இணைவாரா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து கூலி படத்தின் சூட்டிங் தள்ளிப் போகும் என்று தெரிகிறது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பங்கேற்ற ரஜினிகாந்த், கூலி படத்தின் ஷூட்டிங் மற்றும் வேட்டையன் இசை வெளியீடு உள்ளிட்டவற்றிற்காக விசாகப்பட்டினத்திற்கும் சென்னைக்கும் மாறி மாறி சென்று வந்ததால் தான் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.