அழகு கூடியதால் நடிக்க முடியாமல் போன நடிகை.. இது என்னடா புது கதையா இருக்கு

அழகு கூடியதால் நடிக்க முடியாமல் போன நடிகை.. இது என்னடா புது கதையா இருக்கு
  • PublishedOctober 4, 2024

தமிழில் மாதவன் மற்றும் ரீமாசென் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மின்னலே படத்தின் இந்தி ரீமேக் 2001ம் ஆண்டு வெளியானது. ‘ரெஹ்னா ஹை தேரே தில் மே’ என்று படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இந்தி சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் அந்த நடிகை.

ஆம். நடிகை தியா மிஸ்ரா தான் தனது அதீத அழகால் பட வாய்ப்புகளை தவற விட்டவர். தவற விட்டார் என்று சொல்வதை விட, அவரை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை.

நல்ல கதை கொண்ட அர்த்தமுள்ள படங்களில் அதிக ஆர்வம் காட்டினார் நடிகை தியா மிர்சா, ஆனால் அந்த படத்தின் இயக்குநர்களோ மிகவும் அழகாக இருப்பதால் படத்தின் அந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருந்தமாட்டார் என்று கூறி நிராகரித்துள்ளனர்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை தியா மிஸ்ரா கூறுகையில், “மெயின்ஸ்ட்ரீம்’ நடிகையாக என்னை இயக்குநர்கள் பார்த்ததால், நான் விரும்பிய நல்ல கதை கொண்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமலேயே போனது” என்று கூறினார். இப்படி இவர் அழகே, இவர் career-க்கு வில்லியாக மாறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *