வேட்டையனின் வேட்டை ஆரம்பம்… ப்ளூ சட்டை மாறன் என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?

வேட்டையனின் வேட்டை ஆரம்பம்… ப்ளூ சட்டை மாறன் என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?
  • PublishedOctober 10, 2024

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று ரிலீஸ் ஆகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படத்தினை, ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள அவரது 170வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டது.

இந்நிலையில் படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்நிலையில் படம் ரிலீஸ் ஆவது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் வழக்கமாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை எதாவது காட்டமாக விமர்சித்து பதிவிட்டு வருவார். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுக்கு விமர்சனம் செய்யும்போது மிகவும் காட்டமாக தனது தனிப்பட்ட கருத்துக்களையும் முன் வைத்து வருகின்றார் என சூப்பர் ஸ்டார் ரசிகர்களே கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கோட் படத்தின் ரிலீஸின் போது கூட சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படம் குறித்து காட்டமான கருத்தினைத் தெரிவித்திருந்தார்.

அதாவது கோட் படத்தின் முதல் நாள் வசூல் ரூபாய் 126.32 கோடிகள் என படக்குழு தெரிவித்தது. உடனே இதுகுறித்த தகவலைப் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல் ரூபாய் 150 கோடிகள் என போஸ்டரை இப்போதே தயார் செய்து கொள்ளுங்கள் என அப்போதே போஸ்ட் போட்டிருந்தார்.

வழக்கமாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை காட்டமாக விமர்சித்துவரும் ப்ளூ சட்டை மாறன் இன்று அதாவது அக்டோபர் 10ஆம் தேதி, வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியில், ‘இன்று முதல்.. தலைவரின் ஆட்டம் ஆரம்பம்’ என போஸ்ட் செய்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *