தலைவரின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை… முதல்நாள் எத்தனை கோடி தெரியுமா?

தலைவரின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை… முதல்நாள் எத்தனை கோடி தெரியுமா?
  • PublishedOctober 11, 2024

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில், ரஜினிகாந்த் உடன் அவருடைய நண்பர் பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மலையாள நடிகர் பகத் பாசில், தெலுங்கு நடிகர் ரானா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், உள்ளிட்ட பலர் நடித்தனர். அதேபோல் இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்திருந்தார்.

ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக அதிரடி காட்டியுள்ள இந்த திரைப்படம், நேற்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் வெளியானது. அதேபோல் வெளிநாட்டிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் ‘வேட்டையன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படம் இந்தியாவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி அனைத்து இந்திய மொழிகளிலும் ‘வேட்டையன்’ திரைப்படம் சுமார் 30 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தோராயமாக 26.15 கோடி வசூலித்துள்ளதாம். இதை தவிர தெலுங்கில் 3.2 கோடியும், ஹிந்தியில் 0.6 கோடியும், கர்நாடகாவில் 0.05 கோடியையும் வசூலித்துள்ளது.

‘வேட்டையன்’ படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதாலும், தொடர் விடுமுறை காரணமாகவும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்க கூடும் என தெரிகிறது.

ஆனால் ஜெயிலர் படத்தை விட மிகவும் குறைவான வசூலையே முதல் நாளில் இந்த படம் ஈட்டி உள்ளது. ஜெயிலருடன் திரைப்படம் முதல் நாளில் மட்டும், இந்திய அளவில் சுமார் 48 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உலகளவில் வேட்டையன் 78 கோடியை வசூல் செய்திருப்பதாகவும் இணையத்தில் தகவ் வெளியாகி உள்ளது.

https://x.com/LetsXOtt/status/1844644518433264102

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *