விஜய் சினிமாவை விட்டுப் போவது ஒன்றும் பெரிய இழப்பு இல்லை… பிரபலம் பகீர்

விஜய் சினிமாவை விட்டுப் போவது ஒன்றும் பெரிய இழப்பு இல்லை…  பிரபலம் பகீர்
  • PublishedOctober 11, 2024

2024 ஆம் ஆண்டு துவக்கத்தில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அறிவிப்பை தளபதி விஜய் வெளியிட்டார். அது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்த அதே நேரம், இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று தளபதி விஜய் வெளியிட்ட அறிவிப்பு திரையுலகில் அவரை பெரிய அளவில் ரசிக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இடியாக அமைந்தது. ஏற்கனவே அவர் ஒப்புக்கொண்ட இரு திரைப்பட பணிகளை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் அவர் களமிறங்க உள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்கின்ற திரைப்படம் வெளியாகி உலக அளவில் சுமார் 455 கோடி ரூபாயை வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக அது மாறியது.

இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர். இந்நிலையில் அந்த திரைப்படத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் தன்னுடைய 69வது மற்றும் இறுதி திரைப்படத்திற்கான பணிகளை அவர் தொடங்கி இருக்கிறார். பிரபல இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அந்த திரைப்படம் எதிர்வரும் 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தளபதி விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வதால் நிச்சயம் திரைத்துறைக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை என்று சில சர்ச்சையான கருத்துக்களை பேசி இருக்கிறார் தமிழக திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன். “விஜய் அரசியலுக்கு போனால் என்ன? விஜயை தாண்டி வசூல் கொடுக்க இங்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். விஜய் இடத்துக்கு வரவும் இங்கு ஆட்கள் இருக்கிறார்கள். சினிமா எப்போதுமே ஒருவரை நம்பியே இருக்காது. ஒருவர் போனால் மற்றொருவர் அந்த இடத்திற்கு வந்து விடுவார். அதனால் விஜய் சினிமாவை விட்டு போனதும் அது ஒன்றும் பெரிய இழப்பாக எங்களுக்கு இருக்காது” என்று கூறி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *