வேட்டையன் FDFS பார்த்த விஜய் என்ன சொல்லி இருக்கார்? வெங்கட் பிரபு கூறிய செய்தி

வேட்டையன் FDFS பார்த்த விஜய் என்ன சொல்லி இருக்கார்? வெங்கட் பிரபு கூறிய செய்தி
  • PublishedOctober 12, 2024

சமீபத்தில் வெளியான வேட்டையன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை முதல் நாளே விஜய் பிரபலமான ஒரு திரையரங்கில் பார்த்துள்ளார். ஆனால் அவருடன் வெங்கட் பிரபு இருந்தது பல பேருக்கு தெரிந்திடாத ஒன்று.

அமிதாப் பச்சன், ராணா, பஹத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இப்படத்தில் நடித்திருந்தனர். ஜெய் பீம் போன்ற ஒரு படத்தை இயக்கிய ஞானவேல் ரஜினியுடன் இணைகிறார் என்றதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது. மேலும் வேட்டையன் படத்தின் ஷோ ஸ்டீல்லராக பஹத் பாசிலும் துஷார விஜயனும் தான் உள்ளார். இவர்கள் நடிப்பில் தலைவரையே மிஞ்சி விட்டனர்.

வேட்டையன் படத்தில் சொல்ல வரும் கருத்துக்காக ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகின்றார் இயக்குனர் ஞானவேல். ஆனால் வேட்டையன் முழுக்க முழுக்க ரஜினியின் ஸ்டைலில் உருவான படம் இல்லை என்பதனால் ஒரு சில ரசிகர்களுக்கு படம் ஒட்டவில்லை.

தளபதி விஜயை பொறுத்தவரையில், சிறுவயதிலிருந்தே தலைவர் படத்தை பார்த்து வளர்ந்தவர். தலைவரின் மிக பெரிய fan என்றே சொல்லலாம்.

இப்படி இருக்க, ரசிகர்கள் தான் தேவையற்ற வன்மத்தில் செயல்பட்டுவருகின்றனரே தவிர, அவர்களுக்குள் ஒற்றுமையாக தான் இருக்கின்றனர்.

இதையடுத்து சமீபத்தில் வெங்கட் பிரபு பேசுகையில், வேட்டையன் திரைப்படம் விஜய் சாருக்கு ரொம்ப பிடித்துள்ளது. தலைவர் படத்தை யாருக்கு தான் பிடிக்காது என கூறினார். இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *