தனுஷை லெப்ட் அன்ட ரைட் வாங்கிய இளையராஜா… காரணம் என்னவா இருக்கும்?

தனுஷை லெப்ட் அன்ட ரைட் வாங்கிய இளையராஜா… காரணம் என்னவா இருக்கும்?
  • PublishedOctober 13, 2024

இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். சினிமாவில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள இசையராஜா எல்லோராலும் மேஸ்ட்ரோ என்று அழைக்கப்படுகிறார்.

இளையராஜாவின் சிறு வயது வாழ்க்கை வரலாறை அவரே புத்தகமாக எழுதியுள்ளார். இந்த நிலையில் அவரது வாழ்க்கை படமாக்கப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.

சில ஆண்டுகளாகவே இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், இளையராஜா பயோபிக் படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். இப்படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே ஆடுகளம், வடசென்னை, கர்ணன் போன்ற படங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ், இளையராஜாவின் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் எனவும், இளையராஜாவின் கேரக்டரியில் நடிப்பதால் இதற்கென அவரைப் போலவே நடை, உடை, பாவனை, அவரது பேச்சு இதையெல்லாம் அவருடன் இருந்து, அவரும் அருண் மாதேஸ்வரனும் குறிப்பெடுத்து கொண்டிருப்பதாகவும், இதற்கு சில மாதங்களாக இளையராஜாவுடன் இருந்து, அவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரது கடந்த கால வாழ்க்கையில் நடந்த, சிறு வயதில் இருந்து ஞாபகம் வரும் விஷங்களை எல்லாம் சேகரித்து கூறி வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், தனுஷுக்கும் இளையராஜாவுக்கும் இடையே எதோ இப்படம் சம்பந்தமாக கருத்து வேறுபாடு எழுந்ததாகவும், அப்போது இளையராஜா தனுஷை திட்டிவிட்டதாக தகவல் வெளியாகின்றது.

அதனால் தான் இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாவதில் தாமதம் நிலவுகிறது என கூறப்படுகிறது. இருப்பினும் தான் பெரிதும் மதிக்கும் இளையராஜா தன்னை திட்டினாலும் அதை பெரிதாக அவர் எடுத்துக் கொள்ள மாட்டார் எனவும் அவர் தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருவதால்தான் இளையராஜா படம் துவங்க தாமதம் ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *