சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோவுக்கு பொன்னி ஹீரோயினுடன் நிச்சயதார்த்தம்!

சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோவுக்கு பொன்னி ஹீரோயினுடன் நிச்சயதார்த்தம்!
  • PublishedOctober 14, 2024

விஜய் டிவியில் சக்கைப்போடு போடும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. டிஆர்பி ரேஸில் சன் டிவிக்கு டாப் 5ல் டஃப் கொடுக்கும் ஒரே ஒரு விஜய் டிவி சீரியலும் இதுதான். இந்த சீரியலில் நாயகனாக நடித்து வரும் வெற்றி வசந்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சீரியல் ஹிட்டான கையோடு தன்னுடைய திருமணம் பற்றிய அறிவிப்பையும் அண்மையில் வெளியிட்டார் நடிகர் வெற்றி வசந்த்.

அதன்படி நடிகர் வெற்றி வசந்த் நடிகை வைஷ்ணவி சுந்தரை காதலிப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. நடிகை வைஷ்ணவி சுந்தர் பொன்னி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாகவும் மாறி இருக்கிறது. இந்த காதலுக்கு குடும்பத்தினரும் கிரீன் சிக்னல் காட்டியதை அடுத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது.

வெற்றி வசந்த் – வைஷ்ணவி சுந்தர் ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

அப்போது மோதிரம் மாற்றிக் கொண்டு இருவரும் அன்பை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது.

நிச்சயதார்த்தத்தை சிம்பிளாக நடத்தி முடித்தாலும் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம் வெற்றி வசந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *