6 பேருக்கு 16… 48 மணி நேரம் தூக்கம் இல்லை – த்ரிஷா என்ன சொல்லுறாங்க?

6 பேருக்கு 16… 48 மணி நேரம் தூக்கம் இல்லை – த்ரிஷா என்ன சொல்லுறாங்க?
  • PublishedOctober 16, 2024

நடிகை திரிஷா தற்போது விடாமுயற்சி உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

அஜித், விஜய், ரஜினி, கமல், ஆர்யா,சூர்யா என பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டிருக்கிறார் திரிஷா.

கடைசியாக் அவரது நடிப்பில் பிருந்தா வெப் சீரிஸ் வெளியானது. அடுத்ததாக விடாமுயற்சி, தக் லைஃப் ஆகிய படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. மேலும் குட் பேட் அக்லி படத்திலும் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.

சூழல் இப்படி இருக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த மாதம் வெளியானது. படத்தின் பணிகள் ஆரம்பித்ததிலிருந்தே திரிஷா இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் ப்ரோமோஷன்களில் அதனை படக்குழு மறைத்தே வந்தது.

தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக மட்ட பாடலுக்கு திரிஷா ஆடியது இருந்தது.

இந்நிலையில் திரிஷா தனது தோழிகள் ஆறு பேருடன் வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்றிருக்கிறார். அந்த ட்ரிப்பில் GOAT தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் இருக்கிறார். இதுதொடர்பாக பகிர்ந்திருக்கும் வீடியோவில் ஆறு பேருக்கு 16 பெட்டிகள் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் 48 மணி நேரம் தூங்காமல் 24 மணி நேரம் பயணம் செய்திருக்கிறோம். இனி கொண்டாட்டம் ஆரம்பம் என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *