தமிழ் சினிமாவில் முதன்முறையாக… கே.ஜி.எப் சாதனையை முறியடிக்குமா கங்குவா?

தமிழ் சினிமாவில் முதன்முறையாக… கே.ஜி.எப் சாதனையை முறியடிக்குமா கங்குவா?
  • PublishedOctober 17, 2024

நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படம் கங்குவா. கடைசியாக சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தான் திரையில் வெளிவந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து கங்குவா படம் வெளியாகிறது.

இதனால் இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி இப்படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் சூர்யா இணைந்து.

மேலும் வரலாற்று கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், திஷா பதானி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், கங்குவா படம் வட இந்தியாவில் செய்யப்போகும் சாதனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆம், கங்குவா படத்தை வட இந்தியாவில் 3,500 திரையரங்கங்களில் ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.

இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் 3,500 திரையரங்கங்களில் வெளியானதே இல்லை, இதுவே முதல் முறையாகும்.

தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர், கன்னடத்தில் கேஜிஎப் 2 ஆகிய படங்கள் வட இந்தியாவில் 3,500 திரையரங்கிற்கும் மேல் ரிலீஸாகியுள்ளது. ஆனால், தமிழில் அந்த சாதனை முதலில் கங்குவா திரைப்படம் தான் செய்யப்போகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *