பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி காதலை தொடரும் ஜோடி…

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி காதலை தொடரும் ஜோடி…
  • PublishedOctober 18, 2024

பிக் பாஸ் மராத்தி சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நிக்கி தம்போலி மற்றும் அர்பாஸ் படேல் வெளியேவும் தங்கள் காதலை வளர்த்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டுக்குள் இருவரும் போலியாக காதலிப்பது போல நடிக்கின்றனர் என ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில், தாங்கள் இருவருமே உண்மையாகவே காதலிக்கிறோம் என்பதை இருவரும் நிரூபிக்கவே தற்போது அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் சென்று வருவது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை நிக்கி தம்போலி.

பிக் பாஸ் மராத்தி சீசன் 5 போட்டியாளரான அர்பாஸ் படேல் உடன் பிக் பாஸ் வீட்டிலேயே அவருக்கு ஸ்பார்க் ஆன நிலையில், பிக் பாஸை விட்டு வெளியே வந்த பின்னரும் பாவனி – அமீர் போல தங்கள் காதலை தொடர்கின்றனர்.

அடிக்கடி இருவரும் மும்பையின் பல்வேறு இடங்களில் டேட்டிங் செய்து வரும் போட்டோக்கள் வைரலான நிலையில், அதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அர்பாஸ் தற்போது நாங்கள் நண்பர்களுக்கும் காதலர்களுக்கும் இடைபட்ட உறவில் இருக்கிறோம். ஒருவரை ஒருவர் அதிகம் புரிந்துக் கொள்ள முயற்சித்து வருகிறோம் எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *