இயக்குனர் போஸ் வெங்கட்டின் தாய் காலமானார்…

இயக்குனர் போஸ் வெங்கட்டின் தாய் காலமானார்…
  • PublishedOctober 18, 2024

நடிகர் மற்றும் இயக்குநர் போஸ் வெங்கட்டின் Sir படம் இன்றைய தினம் வெளியாகியுள்ளது.

இதனிடையே இன்று மாலை இயக்குநர் போஸ் வெங்கட்டின் தாய் ராஜாமணி, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

அவரது வயது 83. இவரது இறுதி சடங்குகள் சொந்த ஊரான அறந்தாங்கியில் நாளை மாலை நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே போஸ் வெங்கட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

போஸ் வெங்கட்டின் இரண்டாவது படமாக Sir படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாகியுள்ள நிலையில், அதை அவர் கொண்டாடுவதற்கு முன்னதாக அவரது வீட்டில் ஒரு துக்க சம்பவம் நடந்துள்ளது.

போஸ் வெங்கட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *