“எனது முகம் பிளாஸ்டிக் இல்லை” சர்ச்சைகளுக்கு பதில் கொடுத்தார் நயன்தாரா

“எனது முகம் பிளாஸ்டிக் இல்லை” சர்ச்சைகளுக்கு பதில் கொடுத்தார் நயன்தாரா
  • PublishedOctober 28, 2024

நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். நயனுக்கு அன்னபூரணி ஏமாற்றத்தையே கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இந்தச் சூழலில் தன்னைப் பற்றி எழுந்த விமர்சனத்துக்கு நயன்தாரா பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதேபோல் மலையாளத்திலும் டியர் ஸ்டூடண்ட் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இப்படி தொடர்ந்து பிஸியாக இருந்தாலும் தனது மகன்கள், கணவருடன் நேரம் செலவழிப்பதில் கவனமாக இருக்கிறார்.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தப் புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸை அள்ளுவதும் வழக்கம்.

அந்தவகையில் சமீபத்தில் தனது புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் அவர். அதனைப் பார்த்த ஒருதரப்பினர் நயன்தாரா அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார் என்று பேசினர். தற்போது அதற்கு பதிலடி கொடுத்திருக்கும் நயன்,

“முக்கியமான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது என்னுடைய புருவங்களை நான் அழகுப்படுத்திக்கொள்வேன். அது என்னுடைய வழக்கம். என்னுடைய புருவங்களை நிறைய மாதிரி அழகுப்படுத்தியிருக்கிறேன். அதனால்தான் எனது முகத்தை நான் ஏதோ செய்துவிட்டதாக மக்கள் நினைக்கிறார்கள்.

ஆனால் அதில் உண்மையில்லை. இது வெறும் டயட்தான். என்னுடைய உடல் எடையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதேநேரம் என்னுடைய கன்னங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எனது கன்னத்தை கிள்ளியும், எரித்தும் பார்க்கலாம். இது பிளாஸ்டிக் இல்லை” என குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *