கங்குவா நாயகி பெற்ற சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
உத்திரபிரதேசத்தில் பிறந்து, பாலிவுட் திரைப்படங்கள் மூலம் கலை உலகில் அறிமுகமான நடிகை தான் திஷா பாட்னி. ஆனால் இவருடைய குடும்பத்தின் நிலையே வேறு, காரணம் திஷாவின் அப்பா ஒரு காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர்.
அவருடைய தாய் ஹெல்த் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். அதுமட்டுமல்ல திஷா பாட்னியின் அக்காவும் இந்திய ராணுவப்படையில் லெப்டினன்டாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் திஷா பாட்னி மட்டும் இன்ஜினியரிங் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற “பான்ஸ் ஃபெமினா மிஸ் இந்தியா இன்டோர்” போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தினார்.
இப்போது 32 வயதாகும் திஷா பாட்னி, கடந்த 9 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்து வருகிறார்.
இந்த சூழலில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக கங்குவா திரைப்படத்தின் மூலம் அவர் நாயகியாக களமிறங்கினார்.
நாளை நவம்பர் 14ஆம் தேதி உலக அளவில் சுமார் 38 மொழிகளில் 11 ஆயிரத்து 500 திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த சூழலில் திஷா பாட்னியும் தன்னுடைய திரைப்பட பிரமோஷன் பணிகளுக்காக இந்திய அளவில் பயணம் செய்து வருகிறார்.
மேலும் பொதுவாக இரண்டு முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறும் திஷா பாட்னி, கங்குவா திரைப்படத்தில் நடிக்க 3 முதல் 5 கோடி வரை சம்பளம் பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.