தனுஷை அசிங்கப்படுத்த நீலாம்பரியாக மாறிய நயன்தாரா….

தனுஷை அசிங்கப்படுத்த நீலாம்பரியாக மாறிய நயன்தாரா….
  • PublishedNovember 24, 2024

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் கலந்துகொள்ள வந்த நயன்தாரா, தனுஷுக்கு எதிராக பல செயல்களை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தனுஷ், நயன்தாரா இருவருமே கலந்துகொண்டனர். அப்போது இருவரும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.

இவர்கள் இருவருக்குமே ஆகாஷ் பாஸ்கரன் நெருங்கிய நண்பர் என்பதால் தனுஷ், நயன்தாரா இருவருமே இந்த திருமண விழாவில் கலந்துகொண்டனர்.

தனுஷ் நடித்து வரும் இட்லி கடை படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தான் தயாரிக்கிறார். அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் சில படங்களில் உதவி இயக்குனராகவும் ஆகாஷ் பாஸ்கரன் பணியாற்றி உள்ளாராம்.

தற்போது அதர்வாவை வைத்து ஒரு படத்தை அவர் இயக்கி வருவதாகவும், அப்படத்தின் மூலம் இயக்குனராகவும் ஆகாஷ் பாஸ்கரன் அவதாரம் எடுக்க உள்ளாராம்.

இப்படி தனுஷ், நயன்தாரா இருவருக்குமே ஆகாஷ் பாஸ்கரன் நெருங்கிய நண்பர் என்பதால் இருவருமே அவர் திருமணத்தில் கலந்துகொண்டனர். அப்போது வெளிவந்த வீடியோவும் ஏதோ எதர்ச்சியாக வெளியானது என்று அனைவரும் நினைத்து வந்தனர். ஆனால் அதெல்லாம் திட்டமிட்டு எடுக்கப்பட்டது என வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கிறார்.

ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் தனுஷ், நயன்தாரா இருவருமே வருகிறார்கள் என்பது தெரிந்ததும், தனுஷுக்கும் நயன்தாராவுக்கும் அருகருகே இருக்கை ஒதுக்காமல் சற்று தள்ளி தள்ளியே ஒதுக்கி இருக்கிறார்கள்.

ஆனால் நயன்தாரா வந்த வேகத்தில் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியிடம் பேசியபடி தனுஷ் அருகில் இருக்கும் இருக்கையில் உட்கார்ந்தார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் தான் இங்கேயே அமர்ந்து கொள்வதாக கூறிவிட்டு, தனுஷ் அருகில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கிறார் நயன்.

அதுமட்டுமின்றி தான் படையப்பா நீலாம்பரி போல் அமர்ந்திருப்பதை வீடியோ எடுத்து அதை சோசியல் மீடியாவில் வைரலாக்கியதும் நயன்தாராவின் ஆட்கள் தானாம். தனுஷை அசிங்கப்படுத்தவே அவர் இதுபோன்ற செயலை செய்ததாக கூறப்படுகிறது. கல்யாண வீட்டில் நயன்தாரா செய்த இந்த கலாட்டாவால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *