தனது பெயரில் இருந்து பச்சனை தூக்கிய ஐஸ்வர்யா ராய்

தனது பெயரில் இருந்து பச்சனை தூக்கிய ஐஸ்வர்யா ராய்
  • PublishedNovember 28, 2024

உலக அழகிகள் உத்தனை பேர் வந்தாலும், நமக்கெல்லாம் உலக இழகி என்றால் அது நம்ம ஐஸ்வர்யா ராய் தான்.

தனது நடிப்பாலும், அழகாலும் இன்றுவரை ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார் என்றால் அது மிகைளாகாது.

நடிப்பில் பீக்கில் இருக்கும் போது அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் முடித்த ஐஸ்வர்யா ராய்க்கு ஆராத்யா என்ற மகள் இருக்கின்றார்.

இந்த நிலையில் அண்மைக்காலங்களாக ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இதை உண்மையாக்கும் வகையில் ஐஸ்வர்யாராய் எங்கு சென்றாலும் முன்போன்று தனது கணவரை அழைத்துச்செல்வதில்லை.

இதுவே இவர்கள் பிரிந்து விட்டதாக கூறுவதற்கு சான்றாக உள்ளது.

ஆனால் அண்மையில் ஆராத்யாவின் பிறந்ததினத்தன்று அபிஷேக் பச்சன் போட்ட திருமண மோதிரத்தை ஐஸ்வர்யா அணிந்திருந்தார்.

இதையடுத்து இவருகளுக்குள் பிரிவு இல்லை. இன்றளவும் இணைந்துதான் உள்ளார்கள் என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை, அபிஷேக் பச்சனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாகவும் பேசப்படுகின்றது.

நிலமை இப்படி இருக்க அண்மையில், டுபாயில் நடந்த குளோபல் வுமன்ஸ் ஃபோரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்கள் அதிகாரம் பற்றி ஐஸ்வர்யா ராய் பேசினார்.

இருப்பினும், ரசிகர்களின் கண்ணில் ஒரு விடயம் பட்டுள்ளது.

அதாவது, குறித்த நிகழ்வில் அவரது பெயர் “ஐஸ்வர்யா ராய் | சர்வதேச நட்சத்திரம்” என்று மட்டுமே பேடப்பட்டுள்ளது.

அவரும் அவரது கணவர் அபிஷேக் பச்சனும் பிரிந்து செல்ல திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே வதந்திகள் பரவி வரும் நிலையில், ‘பச்சன்’ என்ற குடும்பப்பெயர் விடுபட்டது இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *