தங்கத்தில் மாலை, 8 லட்சத்தில் புடவை.. அடேங்கப்பா அம்பானி கூட இப்படி செய்யலப்பா
எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தியின் பேத்தி வைஷ்ணவி மற்றும் தொழில் அதிபர் ஆர் எஸ் முருகனின் மகன் விஜய் ராகுலுக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது.
திருநெல்வேலியை அலறவிட்ட திருமணத்தில் தங்கத்தில் மாலை, பல லட்சத்தில் புடவை என பல சுவாரசியத் தகவல்களை கூறியுள்ளார் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்.
உலக பணக்காரரான அம்பானியின் மகனுக்கு நிச்சயதார்த்தம், ப்ரீ வெட்டிங், கல்யாணம், ரிசப்ஷன் என ஓராண்டுக்கும் மேலாக நடந்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.
அந்த வகையில் திருநெல்வேலியைச் சேர்ந்த தொழிலதிபர் எம் எஸ் முருகன் தனது மகனுக்கு தமிழ்நாடே வியந்து பார்க்கும் அளவிற்கு திருமணம் செய்து அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்கு நடத்தி விட்டார்.
பல்லாக்கில் பெண் அழைப்பு மற்றும் மாப்பிள்ளை அழைப்பில் துவங்கி, மருமகளுக்கு தங்க ஜரியில் நெய்யப்பட்ட ரூ.8 லட்ச ரூபாயில் புடவை, மூன்று லட்சம் ரூபாயில் ஜாக்கெட், தலையில் வைத்த பூ கூட தங்கத்தால் செய்யப்பட்டது.
மேலும் மாப்பிள்ளைக்கும் பெண்ணிற்கும் தங்கத்தால் செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது. இதைப்பார்த்த பலர் அம்பானி வீட்டுக்கு கல்யாணத்தில் கூட தங்கத்தால் மாலை அணியவில்லை என்று கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் நடைபெற்ற இந்த திருமணத்தில் சுமார் 25-ஆயிரம் பேர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். திருமண வரவேற்பு, பூவால் அலங்கரிக்கப்பட்ட மண மேடை, பல்லாக்கு ஊர்வலம், செண்டை மேளம், மணமக்களை வரவேற்ற யானை என பிரம்மாண்டத்தின் உச்சமாக இருந்தது இந்த திருமணம்.
இந்த திருமணத்தில் மேக்கப் கலைஞராக இருந்தவர் இந்த திருமணத்தை நான் தியேட்டரில் தான் பார்த்து இருக்கிறேன். இதுபோன்ற திருமணத்தை பார்த்து நான் வியந்து விட்டேன் என பேட்டியில் கூறியுள்ளார்.