உலகளவில் ‘புஷ்பா 2’ நடத்திய வசூல் வேட்டை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான ‘புஷ்பா தி ரைஸ்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாவது பாகமாக எடுக்கப்பட்டது.
முதல் பாகம் ரூ.350 கோடி வசூலை அள்ளிய நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (டிசம்பர் 5ஆம்) தேதி ரிலீஸ் ஆனது.
இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள நிலையில், பகத் பாஸில், ஜெகதீஷ் பிரதாப் பந்தரி, ஜெகபதி பாபு, சுனில், அனுசுயா பரத்வாஜ், ராவ் ரமேஷ், சத்யா, அஜய் ,உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.
முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், நேற்று வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும், தொடர்ந்து தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் மசாலா படமாக மாறி திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வருகிறது.
தெலுங்கில் மட்டுமின்றி, தமிழிலும் சுமார் 7 கோடி வசூல் செய்த இந்த திரைப்படம் ஹிந்தியில் 73 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்பட்டது. அதேபோல் ரீ புக்கிங் இல் மட்டுமே இந்த திரைப்படம் 100 கோடியி வசூலை ஈட்டிய நிலையில், சற்று முன்னர் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த தகவலை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி முதல் நாளே, ‘புஷ்பா 2’ திரைப்படம் உலக அளவில் ரூ.294 கோடி வசூல் செய்துள்ளது. இந்த ஹிஸ்டாரிக் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த வேகத்தில் போனால் இரண்டு நாட்களில் புஷ்பா 2 திரைப்படம் ரூ.500 கோடியை எட்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. புஷ்பா 2 படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு, படக்குழுவினரையும் உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது..