முதல் படத்திலேயே இத்தனை கோடி சம்பளமா? விஜய் என்ன சொன்னார் தெரியுமா?
ஜேசன் சஞ்சயின் முதல் பட அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தை லைகா தயாரிப்பதாக அறிவித்தது. ஓராண்டு ஆகியும் எந்த அப்டேட்டும் இது பற்றி வரவில்லை. இப்படம் உருவாகுமா? இல்லையா? எனக் கேள்வி எழுந்தன.
ஜேசன் இயக்கும் முதல் படத்தின் ஹீரோவாக சந்தீப் கிஷன் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதன் வீடியோவும் வெளியானது. இந்தப் படத்தை இயக்க ஜேசன் சஞ்சய்க்கு ரூ.10 கோடி சம்பளம் என தகவல் வெளியானது.
முதல் படத்தில், எந்த அனுபவமும் இல்லாமல் படம் இயக்குகிறார் ஜேசன்.சஞ்சய். அவருக்கு முன்னணி இயக்குனர்கள் வாங்கும் சம்பளமா? எனக் கேள்வி எழுந்தன.
தான் முன்னணி நடிகராக இருக்கும் நிலையில் மகன் அதேதுறையில் கால்பதிப்பது ஒரு தந்தையாக விஜய்க்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவரது சொந்த முயற்சியில் படம் வாய்ப்பு கிடைத்ததால் மேலும் அவருக்கு மகிழ்ச்சி தான்.
வாரிசு சாயம் விழுந்துவிட கூடாது என்பதால் விஜய் மகனுக்கு வாழ்த்துகளை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என தெரிகிறது.
ஆனால், தன் ஆசையை ஜேசன் நிறைவேற்றி, தன் திறமையின் மூலம் படம் இயக்க வாய்ப்பு பெற்றதற்கு விஜய்க்கு ரொம்ப மகிழ்ச்சியைத் தந்திருக்கிறதாம்.