அசுர வேகத்தில் வசூல் வேட்டையாடும் ‘புஷ்பா 2’…
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும், அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடித்த ‘புஷ்பா 2’ திரைப்படம் ரூ.350 கோடி வசூல் சாதனை படத்தை நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் 12,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக இரண்டாவது படத்தை, சுமார் 400 முதல் 500 கோடி வரை பணத்தை கொட்டி, ‘புஷ்பா 2’ படத்தை தயாரித்திருந்தது மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். அதே போல் இந்த படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சுமார் 300 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
‘புஷ்பா தி ரூல்’ திரைப்படம் வெளியாகி ஒரு தரப்பினர் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும், மற்றொரு தரப்பினர் மத்தியில் நெகட்டிவ் விமர்சனத்தையும் பெற்றது.
ஆனால் விமர்சனங்களை தாண்டி சில படங்கள் கண்டிப்பாக ரசிகர்களை சென்றடையும் என்பதற்கான சிறந்த உதாரணமாக மாறிய இப்படம், நெகட்டிவ் விமர்சனங்களை உடைத்தெறிந்து தற்போது அசுர வேகத்தில் திரையரங்கில் வசூல் வேட்டை ஆடி வருகிறது.
முதல் நாளே, ரூ.294 கோடி வசூலித்த ‘புஷ்பா 2’ திரைப்படம் நாளுக்கு நாள் வசூலில் பல படங்களின் சாதனையை முறியடித்து வருகிறது. அந்த வகையில், நான்காவது நாளில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற தகவலை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி நான்கு நாட்களில், சுமார் ரூ.829 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. இதன் மூலம், 800 கோடி வசூல் சாதனை படைத்த ரஜினிகாந்தின் 2.0 படத்தின் சாதனையை காலி செய்துள்ளது ‘புஷ்பா 2’.
மேலும் இதே வேகத்தில் சென்றால், கல்கி, RRR, பாகுபலி போன்ற படங்களின் லைப் டைம் வசூலை ஒரே வாரத்தில் பீட் பண்ணிவிட்டுடும் இந்த படம் என கூறி வருகின்றனர் திரைப்பட விமர்சகர்கள்.