TR குரலுக்கு செம ஆட்டம் போட்ட சூப்பர் ஸ்டார்… வைரலாகும் சிக்கிடு வைப்
நேற்று ரஜினி தன்னுடைய 74 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கு லோகேஷ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் கூலி டீம் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது.
அப்படத்திலிருந்து கிலிம்ஸ் வீடியோ ஒன்று நேற்று வெளியானது. சிக்கிடு வைப் என்ற பெயரில் வெளியான அந்த மியூசிக் இப்போது வைரலாகி வருகிறது.
அதில் டி ராஜேந்தர் குரலில் செம ஆட்டம் போட்டிருந்தார் ரஜினி. கடந்த சில படங்களில் அவர் ஆடவில்லை ஹீரோயின் தான் ஆடுகிறார் என்ற விமர்சனம் இருந்தது.
அதை பொய்யாக்கி எல்லோரையும் ஆட வைத்து விட்டார் சூப்பர் ஸ்டார். அதேபோல் டி ராஜேந்தரின் குரலை நிச்சயம் ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இதை இப்போது கொண்டாடி வரும் ரசிகர்கள் இளையராஜாவையும் ஜாடையாக நக்கல் செய்து வருகின்றனர். அதாவது இளையராஜா ராயல்டி என்ற பெயரில் சர்ச்சைக்கு உள்ளானது அனைவருக்கும் தெரியும்.
அவருடைய பாடலை உபயோகப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு பல கட்டுப்பாடுகள் இருக்கிறது .அதனால் தான் அனிருத் டி.ஆர் குரலை உபயோகப்படுத்தி விட்டதாக தெரிகிறது.
இதன் மூலம் இளையராஜாவுக்கு ஒரு பதிலடி கிடைத்திருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர. எது எப்படியோ டி ஆர், ரஜினி காம்பினேஷன் இப்போது பட்டையை கிளப்பியுள்ளது.