விஜய், த்ரிஷாவின் புகைப்படங்கள் வெளியானது எப்படி? திமுகவுக்கு அண்ணாமலை வச்ச செக்

விஜய், த்ரிஷாவின் புகைப்படங்கள் வெளியானது எப்படி? திமுகவுக்கு அண்ணாமலை வச்ச செக்
  • PublishedDecember 19, 2024

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொன்னதிலிருந்து அவருடன் ஒட்டிக்கொண்ட சர்ச்சை தான் த்ரிஷா. விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்து விட்டார் என்ற தகவல் கூட வெளியானது.

அது மட்டும் இல்லாமல் விஜய் மற்றும் திரிஷா பிரைவேட் ஆக எடுத்த போட்டோக்களும் திடீரென சமூக வலைதளத்தில் வைரலாக ஆரம்பித்தன.

இந்த நிலையில் தான் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு இவர்கள் இருவரும் ஒரே விமானத்தில் பயணத்திருக்கிறார்கள். விமானத்தில் பயணித்தவர்களின் பெயர்கள் கொண்ட லிஸ்ட், விஜய்யின் புகைப்படம் என அத்தனையும் வெளியானது.

அது மட்டும் இல்லாமல் அந்த லிஸ்டில் இருந்த ராஜேந்திரன் என்பவர் பாஜக கட்சியின் ஆதரவாளர் என்று கூட சொல்லப்பட்டது. கடைசியில் பார்த்தால் அந்த ராஜேந்திரன் என்பவர் விஜய்யின் நீண்ட கால கார் டிரைவர். விஜய்க்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்க்க முடியவில்லை.

ஆனால் கீர்த்தி சுரேஷ் கல்யாணத்திற்கு கோவா சென்று இருக்கிறார் என்று கிளப்பப்பட்டது. தற்போது இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

விஜய் மற்றும் திரிஷா கோவா பயணத்திற்கு போனதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

விமானத்தில் யார் பயணிக்கிறார்கள் என்ற லிஸ்ட் மற்றும் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட விஜய்யின் புகைப்படங்கள் எப்படி வெளியே வந்தது. அப்போது இதை புகைப்படமாக எடுத்தது யார்.

விமான நிலையத்திற்குள் எந்த பாதுகாப்பும் பொது மக்களுக்கு கிடையாதா. இந்த புகைப்படத்தை எடுத்தவர் யார் என்பதை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்க வேண்டும்.

அப்போதுதான் இதற்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்பது தெரியும். இது குறித்து நான் விமான நிலைய அதிகாரிகளுக்கு புகார் கொடுக்க இருக்கிறேன் என பேசி இருக்கிறார்.

மேலும் விஜய் மீது தவறான கருத்தை பரப்ப திமுக தான் இது போன்ற வேலையை செய்வதாகவும் சொல்லி இருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *