வருது… வருது… வருது… பொங்கலுக்கு வருது புஷ்பா – 2
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி 1,000 கோடிக்கு மேல் வசூலித்த புஷ்பா 2 தி ரூல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ந் தேதி திரைக்கு வந்தது.
ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே சக்கைபோடும் போட்டு வரும் புஷ்பா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
குறிப்பாக முதல் நாளில் மட்டும் இப்படம் 294 கோடி வசூலித்து இந்தியாவிலேயே முதல் நாள் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது. தற்போது 13 நாட்களைக் கடந்து வெற்றிநடைபோட்டு வருகிறது புஷ்பா 2.
இந்த நிலையில், தியேட்டரில் சக்கைப்போடு போட்டு வரும் புஷ்பா 2 திரைப்படம் அதற்குள் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதன்படி வருகிற ஜனவரி மாதம் 9-ந் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி புஷ்பா 2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளாத்தில் வெளியாக உள்ளதாம்.
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 275 கோடிக்கு வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.