சூரியின் ‘விடுதலை 2’ படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி

சூரியின் ‘விடுதலை 2’ படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி
  • PublishedDecember 19, 2024

கோலிவுட் திரையுலகில், முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், ரஜினி, கமல்ஹாசன், சூர்யா, போன்ற சில நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே தமிழக அரசின் அனுமதியோடு சிறப்பு காட்சி வெளியிடப்படுகிறது.

ஆனால் தற்போது காமெடியனாக இருந்து கதாநாயகனாக மாறி உள்ள, நடிகர் சூரியின் திரைப்படத்திற்கும் உரிய அரசு அனுமதியோடு சிறப்பு காட்சி வெளியிடப்பட உள்ளது.

இது குறித்து அரசு தரப்பில் இருந்து அறிக்கை வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பின் காரணமாகவே தற்போது, அரசு அனுமதியோடு நாளை ஒரு நாள் மட்டும் இரவு 9 மணி முதல் இரவு 2 மணி வரை சிறப்பு காட்சிகளை திரையரங்குகள் ஒளிபரப்ப அரசு தரப்பில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இளையராஜா இசையமைத்துள்ள ‘விடுதலை 2’ திரைப்படத்தை, ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் கிராஸ் ரூட் ஃபிரம் கம்பெனி தயாரித்துள்ளது. மேலும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் இந்த படத்தை விநியோகம் செய்துள்ளது.

ஆர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு, ஆர் ராமர் படத்தொகுப்பு செய்துள்ளார். பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யாப், கௌதம் வாசுதேவ் மேனன். பவானி ஸ்ரீ, அட்டகத்தி தினேஷ், போஸ் வெங்கட், வின்சென்ட் அசோகன், ரவி மரியா, பிரகாஷ்ராஜ், இளவரசு, பாலாஜி சக்திவேல், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *