அமரன் கொடுத்த ஹிட்… பாலிவுட் செல்கின்றார் ராஜ்குமார் பெரியசாமி
சிவகார்த்திகேயனின் அமரன் படம் 300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அடுத்து தனுஷை வைத்து அவர் படம் இயக்க இருக்கிறார். இந்நிலையில் தற்போது அவர் பாலிவுட்டில் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அமரன் படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. படத்தை பார்த்த பிரபல ஹிந்தி தயாரிப்பாளர் பூஷன் குமார் தற்போது ராஜ்குமார் பெரியசாமியை ஹிந்தி படம் இயக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறாராம்.
Pan இந்தியா படமாக இது உருவாக இருக்கிறது என்றும் 2025ல் இது தொடங்கும் என்றும் தகவல் வந்திருக்கிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம்.