வரப்போகுது 96 பார்ட் 2 – 90s கிட்ஸ்க்கு ஹாப்பி நியுஸ்
இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்டோர் நடித்த படம் 96. இந்த படம் பல 90ஸ் குழந்தைகளின் காதல் வலிக்கு அருமருந்தாக உள்ளது. இந்த படத்தின் இசை படத்தை அடுத்த லெவல்-க்கு எடுத்துச்சென்றது.
இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி படமாகவே அமைந்தது. இதை தொடர்ந்து, சில வருடங்கள் கேப் எடுத்துக்கொண்டு, அடுத்ததாக மற்ற ஒரு Feel Good படமான மெய்யழகன் படத்தை கொடுத்தார் பிரேம் குமார். இந்த படம் OTT-யில் வெளியான பின், வழக்கம் போல படத்தை தியேட்டரில் மிஸ் பண்ணிட்டோமே என்று மக்கள் பீல் செய்தார்கள்.
இந்த நிலையில், பிரேம் குமார் இயக்கத்தில் அடுத்து என்ன படம் வரும் என்பது ஒரு எதிர்பார்ப்பாக இருந்தது. அதை பற்றி சமீபத்தில் பிரேம் குமார் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
பிரேம் குமார் 96 படத்தின் sequel கதையை எழுதிக்கொண்டு இருக்கிறார். முக்கால் வாசி கதையை முடித்துவிட்டாராம்.
அந்த படத்தை முடித்துவிட்டு, ஒரு Adventure திரில்லர் படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் பிரேம் குமார்.