மாஸ் டைட்டில் உடன் வந்த Suriya 44 டீசர்
கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். சூர்யாவின் 44-வது படமான இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
இப்படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.
சூர்யா 44 திரைப்படத்திற்கு ரெட்ரோ என பெயரிடப்பட்டு உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி கிறிஸ்துமஸ் தின ஸ்பெஷலாக அப்படத்தின் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.