கைதி 2 படத்துக்கு வந்த சிக்கல்… லோகேஷ் கனகராஜுக்கு வந்த சோதனை
நான் ஈ, புலி போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் கிச்சாசுதீப். இவர் நடித்து இன்று வெளியாகிருக்கும் படம் மேக்ஸ். கிச்சா சுதீப் தான் இந்த படத்தின் இயக்குனரும் கூட.
மேக்ஸ் படத்தை தயாரித்தவர் கலைப்புலி எஸ் தானு. இந்த படம் இரண்டு நாட்களுக்கு முன்னரே ஆந்திராவில் கன்னட மொழியில் ரிலீஸ் ஆகி ஹிட்டடித்துள்ளது. இன்று தமிழிலும் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆந்திராவில் மட்டும் கிட்டத்தட்ட 25 கோடிகள் ஷேர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறதாம் கிச்சா சுதீப்பின் மேக்ஸ் படம். ஒரு நாள் இரவில் நடக்கும் கதை தான் இந்த படமாம். இந்த படத்தை பார்த்தால் கைதி 2 படம் பார்த்த பீலிங் தான் அனைவருக்கும் கிடைக்குமாம். அதேபோல் ஜெயில் பேக்ரவுண்டில் நடக்கும் கதை.
லோகேஷ் கனகராஜ் கைதி இரண்டாம் பாகம் எடுப்பதற்கு ப்ளான் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் இதில் ஏதாவது காட்சிகள் ஒத்துப் போகுமானால் மொத்தமாய் அவருடைய ஐடியாவை மாற்ற வேண்டும். இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக கைதி இரண்டாம் பாகத்தின் தாக்கம் ஏற்படுமாம்.
இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், இளவரசு, ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி போன்ற தமிழ் நடிகர்களும் நடித்துள்ளனர். புஷ்பா படத்தில் வில்லனாக நடித்த சுனிலும் இதில் முக்கிய கதாபாத்திரம் செய்திருக்கிறார். முதல் நாள் மட்டும் இந்த படம் 8 கோடிகள் வசூலித்துள்ளது.
இங்கே பயனூரில் செட் அமைத்து முக்காவாசி படத்தையும் எடுத்திருக்கிறார்கள். விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒவ்வொரு காட்சிகளையும் அமைத்துள்ளனர். இந்த படத்தின் கர்நாடக உரிமையை சுதீப் வாங்கியுள்ளார். ஆனால் தமிழில் மொத்த காசையும் போட்டு எடுத்தவர் கலைப்புலி எஸ் தானு.