ஹிந்தி பிக்பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்டார் ஸ்ருத்திகா…

ஹிந்தி பிக்பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்டார் ஸ்ருத்திகா…
  • PublishedJanuary 9, 2025

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் தமிழ் நடிகையான ஸ்ருத்திகா இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்ட நிலையில், வெளியே வந்ததும் இவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய 15 வயதிலேயே சூர்யாவுக்கு ஜோடியாக ‘ஸ்ரீ’ படத்தில் நடித்த நடிகையும், தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியுமான ஸ்ருத்திகா கலந்து கொண்டார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார்.

இதுவரை ஹிந்தி பிரபலங்களே பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் கலந்து கொண்ட நிலையில், ஸ்ருத்திகா தமிழ் திரையுலகில் இருந்து சென்று ஹிந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆச்சரியப்படுத்தினார்.

ஆரம்பத்தில் ஸ்ருத்திகா நடந்து கொள்ளும் விதம், நடிப்பது போல் இருப்பதாக ஹிந்தி ரசிகர்கள் விமர்சித்தாலும்… பின்னர் இவர் நிஜ குணமே இப்படித்தான் என்பதை ஏற்றுக்கொண்டனர்.

ஹிந்தியிலும் ஸ்ருத்திகாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவான நிலையில், தற்போது ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டு வாரங்களில் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் நேற்று நடைபெற்றது.

இதிலிருந்து ஸ்ருத்திகாவை, நண்பர்கள் என கூறி சுற்றிக்கொண்டிருந்தவர்களே டார்கெட் செய்து வெளியே அனுப்பினர்.

அதே நேரம் ஸ்ருத்திகா கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். அவருக்கு அதற்கான அணைத்து தகுதியும் உள்ளது என ஸ்ருத்திகாவுக்கு ஆதரவு கொடுக்கும் படி, விஜய் டிவி பிரபலங்களான ரக்ஷன், புகழ், ரோஷ்ணினி உள்ள பலர் வீடியோ வெளியிட்டு ஆதரவு கொடுக்கும் படி கூறி வந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத நேரத்தில் இவரது வெளியேற்றம் நடந்தது அன் ஃபேர் ஏவிக்சன் என கூறி வந்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில் தற்போது, ஸ்ருத்திகா பிக்பாஸ் ஹிந்தி சீசன் 18 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கையேடு, தனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில், “எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. நம்ம ஊரில் இருந்து மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் தனக்கு மெசேஜ் போட்டு பலர் வாழ்த்திவருகிறார்கள். எனக்கு இவ்வளவு சப்போர்ட் கொடுத்து இருக்கீங்க… அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.

எங்க அப்பா இந்த நிகழ்ச்சிக்கு என்ன ரொம்ப கஷ்டப்பட்டு தான் அனுப்பி வச்சாரு. நானும் நல்லா விளையாடனும் என்று நினைத்தேன். என்னால் முடிந்தவரை சிறப்பாக விளையாடி இருக்கிறேன். அதே நேரம் நான் அழுததை பார்த்து பலர் கண்கலங்கியதாக கூறினார்கள்.

உங்களை அழ வைத்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் ஆதரவு என்னை மிகவும் மகிழ்ச்சியாக்கி இருக்கிறது. இதுவரை எனக்கு சப்போர்ட் செய்த அனைவருக்கும் நன்றி என ஸ்ருத்திகா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *